என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தவறி விழுந்து பலி"
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராமன் புதூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வினித்கிருஷ்ணன் (வயது 35). இவர் திண்டுக்கல் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியா குழந்தைகளுடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.
வினித்கிருஷ்ணன் திண்டுக்கல்லில் இருந்து வாரத்துக்கு ஒருமுறை ஊருக்கு வந்து சென்றார். கடந்த 6-ந்தேதி திண்டுக்கல்லில் இருந்து ஊருக்கு பஸ்சில் வந்தார். தோவாளையை அடுத்த நாக்கால் மடம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது ஓடும் பஸ்சில் இருந்து வினித் கிருஷ்ணன் தவறி கீழே விழுந்தார்.
இதில் வினித்கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினித்கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான வினித்கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
கோவை:
பெங்களூர் அருகே உள்ள இளநல்லியை சேர்ந்தவர் வசீர். இவரது மகன் நயாத் மாபிசா (34). இவர் கோவை பீளமேடு ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள ராமலட்சுமி நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு இவர் தனது நண்பர்களுடன் 3 மாடியில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. ஒரு மாடியில் இருந்த அடுத்த மாடிக்கு யார் குதிக்கிறார்கள் என போட்டி வைத்தனர். அதன்படி நயாத் மாபிசா மற்றொரு மாடிக்கு தாண்டும் போது 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நயாத் மாபிசா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பல்லவன்கோவிலைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 22). இவர் திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
நேற்று விருதுநகர் அருகே கள்ளிக்குடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு யோகேஸ்வரன் வந்தார். பின்னர் மாலையில் ரெயில் மூலம் திண்டுக்கல் செல்வதற்காக விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது திண்டுக்கல் செல்லும் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக குருவாயூர் சென்ற ரெயிலில் யோகேஸ்வரன் தவறுதலாக ஏறிவிட்டார். இதையறிந்த யோகேஸ்வரன் சுதாரித்துக் கொண்டு வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கினார். இதில் அவர் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள், யோகேஸ்வரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே யோகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
காங்கயம் அருகே உள்ள வீராணம்பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ்(வயது 25) பட்டதாரி. இவரது நண்பர் செந்தில்குமார்(26) இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களது 2 பேரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் காங்கயத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நல்லிபாளையம் பிரிவில் வந்த போது நிலைத்தடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். சுபாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், சர்வேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜ் தர்மபுரியில் இருந்து செல்லும் அரசு பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் பஸ்சின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்ததாக தெரிகிறது. காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு இருந்தார். பின்னர் பஸ் புறப்பட்ட போது கனகராஜ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்